Thursday, April 9, 2009

இருபத்து ஆண்டுத் திட்டம் ஒன்றை தமிழர்கள் உலகமெங்கும் உருவாக்குவோம்!

உலகில் எங்கு நோக்கினும் மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை . இதற்கு என்ன காரணம் ? பணம் ! பணம்தான் இன்று எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு இருபது ஆண்டுகள் கண்டிப்பாக நம் பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டிய நூல் திருக்குறள் ஒன்றுதான்.

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு திருக்குறள் நூலை திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௧ ஜனவரில் வாங்கிக் கொடுத்து பள்ளிகளிலும் இல்லங்களிலும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அனைத்து நாடுகளிலும் உள்ள நம் சமுதாயத் தலைவர்கள் நம் சமுதாயத்தைச் சீர்திருத்த முன்வர வேண்டும்; பாதுகாக்க வேண்டும்.

இதற்கு,தமிழக அரசு தான் உலகத்தமிழர்களுக்கு முன்மாதிரியாக உலகத் தமிழர்களுக்கும் உணர்த்தும் வகையில் அதன் சட்ட நடவடிக்கைகளை முதலில் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் முறையாகப் பதிவு செய்யவேண்டும்.

திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௧ ஜனவரி முதல் சட்டமுறைப்படி தமிழரின் வாழ்வியல் நூல் திருக்குறள்தான் என்பதை உலகத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

Wednesday, April 8, 2009

தமிழக முதலமைச்சராக வருகின்றவர்களிடம் கேட்கின்றோம்...

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் முதலில் நடைமுறைப் படுத்தவேண்டிய ஒரு திட்டம். அதாவது, அதுவொரு புரட்சித்திட்டம். ஆம், முதல் வகுப்பு மாணவர்களுக்கு ஆளுகொரு திருக்குறள் புத்தகத்தை வழங்க வேண்டும்.

முதல் நாளிலேயே ஆசிரியர்கள் மாணவர்களின் கைகளிலுள்ள அப்புத்தகத்தை தமிழர்களின் வாழ்வியல் நூல் திருக்குறள்தான் என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்லிவிட வேண்டும்.

இச்செயலானது அம்மாணவர்களை பண்புள்ள தமிழர்களாக மாற்றுவதுடன் தமிழக அரசு மேற்கொள்ளும் இத்திட்டத்தை உலக நாடுகளின் அரசுகளும் அந்நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் தமிழர்களின் பண்பாட்டு நூல் திருக்குறள்தான் என்பதயும் உறுதி செய்து கொள்வார்கள் ; தொடர்ந்து திருக்குறள் கற்ற தமிழ்ச்சமுதாயமாக தங்களையும் மாற்றிக்கொள்வார்கள். அரசும் அதற்கான உதவிகளைச் செய்ய முன்வரும்.

எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௧ முதல் தமிழாக அரசின் செயல்திட்டமாக ஏற்று நடைமுறைப் படுத்துமாறு அடுத்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் தமிழாக முதல்வரைக் காண திருக்குறள் கல்வி அறவாரியத்தின் குழுவினர் தமிழ்கம் செல்லத் திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு உலகத்தமிழர்களின் அன்பான வேண்டுகோள்!

தமிழன் அரசு உலகத் தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டை உறுதி செய்யும் நல்ல நோக்கத்தில் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு முதல் வகுப்பில் கல்வி கற்கத் தொடங்கும் அன்றே ஒரு திருக்குறள் புத்தகத்தைக் கையில் கொடுத்து;
" இந்தப் புத்தகத்தில் இருப்பவைதான் நமது பண்பாடு . இப்புத்தகத்தை எப்போதும் உங்கள் கைகளில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் "

என "தமிழர் " என்பதற்கு நமக்குள்ள அடையாளமும் "தமிழ் மொழிதான் நம்மொழி என்பதற்கான உறுதிப்பாடும் "திருக்குறள்" நூல்தான் என சொல்லித் தந்துவிட வேண்டும்.

தமிழ்நாடு உட்பட உலக நாடுகளில் உள்ள தமிழின ஆசிரியர்களும் பெற்றோரும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு தம் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவர வசதியாக ஒரு மாணவருக்காவது இவ்வாறு சொல்லிக் கொடுத்ததை உறுதிப் படுத்தி ஒரு புகைப் படத்தோடு ஒரு நாள் இதழில் அச்செய்தியை வெளியிட்டு அச்செய்தியை ஒரு படியெடுத்து திருக்குறள் பணிக் கள கல்வி அற வாரியத்திற்கு , இம்முகவரிக்கு அனுப்புங்கள் .

திருக்குறள்


அறிவுடையார் எல்லாம் உடையார் ....

தமிழ்நாட்டுத் தமிழிர்களிடம் என்ன என்ன இருக்கிறதோ அவைகள்தான் உலகமெங்கும் வாழ்கின்ற தமிழ்மக்களிடமும் இருக்குமென எதிர்பார்க்க முடியும்.

தமிழ்நாட்டு அரசு, பள்ளிகளில் முறையாக "திருக்குறள் " என்ற ஒரு புத்தகத்தின் உதவியில் தன்னை ஒரு தமிழராகவும் , தன்னுடைய பண்பாடு அப்புத்தகத்தில் இருப்பதையும் ஒருமுறை ஆசிரியர்கள் மூலம் ஒவ்வொரு மாணவரும் உணரும்படி சொல்லித் தந்துவிட வேண்டும்.

தமிழ் நாட்டில் , இப்படி திருக்குறளை அரசே முன்னெடுத்துச் சொல்லித் தராதவரை , தமிழர்களின் பண்பாடு என்னவென்பதை , உலக நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய முடியாது. இசுலாமியர்களின் பண்பாட்டை - கிறித்துவர்களின் பண்பாட்டை உலக அரசுகள் அறிந்துள்ளன. ஆனால், தமிழ்ப் பண்பாடு என்னவென்பதை உலக நாடுகளில் வாழும் தமிழர்களால் சொல்ல முடியவில்லை ! ஏனென்றால் தமிழக அரசே இன்னமும் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே திருக்குறள் புத்தகமொன்றை அரசே மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்களைக் கொண்டு அதைச் சொல்லித்தரத் தொடங்கவில்லை.

பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் மாணவர்களை முதலில் தேர்வு செய்வோம்!

எதிர்வரும் ௨0௧0 ஆண்டு முதலாக தமிழாக இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் தமிழக அரசு முதலில் தமிழகப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு திருவள்ளுவர் தினத்தில் ஆளுக்கொரு திருக்குறள் நூலை வழங்குவதை (கச்ட்டமரி லோ ) ஆக்கவேண்டும்.

அதாவது, தமிழன் தன் வாழ்வியல்நூல் எது ?; என்பதை, அவன் கல்வி கற்கும் பள்ளிதான் ஒரேஒருமுறை அவனுக்கு/அவளுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் திருக்குறளை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இது கட்டாயம்.
அந்த அறிமுகம் தான் அவனை சமயங்களுக்கெல்லாம் அப்பார்ப்பட்டு முதலில் நான் ஒரு தமிழன் அதன் பிறகுதான் என் சமயம் என்னவென்பதை நான் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதை அவன் படிப்படியாக உணர்வான்.

இதைச் செய்யாதவரை , ஒரு தமிழன் /தமிழச்சி தன் நாடும் தன் இனமும் பெருமைப்பட , தாம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன ? என்பதை அவர் அறிவார். இதை அறிய அவருக்குரிய நூலை அவருக்கு தமிழக அரசு இவ்வளவு காலமும் அறிமுகம் செய்யாமல் போனதால் , அறிவற்ற வழிகளில் செல்லத் துணிகின்றார்கள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே!

நம்மக்களின் மரியாதையை உலகளவில் உயர்த்திய நூல் திருக்குறள் என்றால் அது மிகையில்லை . வேற்றினங்களை சேர்ந்த அறிஞர்கள் திருக்குறளைப் படித்துப் பயனடைகிறார்கள் ; ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் திருக்குறள் படித்துப் பயன்பெறுவதை நம் இனத்தின் வழக்கமாக அரசின் வழி இன்னமும் மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வில்லையானால் நாம் எவ்வளவுக்கு நம் பெருமைகளை நாமே மறந்துவிட்டோம் என்பதை நம் இனத்தலைவர்கள் இப்போதாவது உணர்ந்து திருந்த வேண்டுகிறேன் . தமிழரின் சமூகத் துறைகளை தலைமை தாங்கி வழி நடத்துவோர் திருக்குறளை தமிழ்ர்களின் வாழ்வியல் நூலாக, நாள்தொறும் திருக்குறள் படிப்பதை ஒரு இனத்தின் வழ்க்கமாக மாற்றியமைக்கும் ஒரு முறையை சட்டமாக்கி அது ஒரு (கச்ட்டமரி லோ ) வாழ்க்கைச் சட்டமாக ஆக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி ஆக்கவில்லை ! தான் இப்படி உயர்ந்த நிலைக்கு வருவதற்கு திருக்குறளே காரணம்; என தன் புகழை திருக்குறளால் உயர்த்திக் கொள்வார்கள் . திருக்குறளால் மக்களும் உயர வழிகாட்ட மாட்டார்கள் !

Sunday, March 29, 2009

எய்தற்கு அரியது இயைந்தக்கால்..

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழிலக்கியத்தை தமிழ்ப்பள்ளிவழி வந்த மாணவர்களுக்குக் கற்பிக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. அதேவேளையில் உலகத் தமிழர்கள் ஏங்கித் தவிப்பதெல்லாம் தங்கள் பிள்ளைகளின் தற்போதைய நிலை நமது சிறந்த பண்பாட்டுக் கூறுகளை இழந்து ஒட்டுமொத்த இனத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் விதத்தில் தாய்மொழிக் கல்வியைப் பயிற்றுவிக்க விரும்பாத பெற்றோரின் தொகை , பொருள் ஈட்டுவதில் மட்டுமே குறியாகவுள்ள அரசுகளின் தொகை உலகமெங்கும் பெருகி வருவதால் தாய்மொழியின் வழி நற்பண்புகளைக் கற்பிக்க அனைவருமே தவறிவிடுகின்றனர் . அவரவரின் தாய்மொழியின் வழி திருக்குறளை உலகமெங்கும் அனைத்து மக்களும் படிக்கும் விதத்தில் இணையப்பக்கத்தின் உதவியில் நம் தாய்மொழியில் - ஆங்கிலத்தில் திருக்குறளின் நற்பண்புகளைக் கற்பித்து உலகமக்களுக்கு மலேசியாவிலிருந்து அரசும் எழுத்தாளர் சங்கமும் இணைந்து வழி காட்டுவோம் !
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அறிய செயல் - திருக்குறள்- 489

திருக்குறளை மக்களின் இலக்கியமாக்குவோம்!

மலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறையும் இணைந்து மலேசியக் கல்வியமைச்சிடம் கிழ்க்கண்ட வாறு ஒரு வேண்டுகோளை முன்வைக்கலாம்; அதாவது , அனைத்து தமிழ் தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ்மொழியைப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அடுத்த ஆண்டு பள்ளிக்குச்செல்லும் தங்கள் மாணவர்களுக்கு சொந்தமாகவே வாங்கிக் கொடுக்கவேண்டிய பொருட்களின் பெயர்ப்பட்டியலில் ஒரு திருக்குறள் நுலையும் பெற்றோர்களே தன் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். என குறிப்பிட்டு அப்பெயர்ப் பட்டியலை பெற்றோர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டுமென அறிக்கை வழி தலைமையாசிரியர்களைக் கேட்டுக்கொள்ளுமாறு வேண்டலாம் .

தமிழ் மாணவர்களுக்கு உலக அளவில் திருக்குறள் நூலில் தமிழ்ப் பாடம்!

திருவள்ளுவராண்டு ௨௦௪௧ (கிபி ௨௦௰) முதல் அனைத்து நாடுகளிலுமுள்ள தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு திருக்குறள் நூலை வாங்கிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதன்வழி மாணவர்கள் தங்கள் தாய்மொழி எது என்பதையும் தங்களுக்குரிய தமிழ்ப்பண்பாடு என்ன என்பதையும் சில நாட்களுக்குள்ளேயே உணர்ந்துகொள்வார்கள் .
ஒரு தமிழ்மாணவரின் கையில் உள்ள திருக்குறள் நூலை தமிழ் மாணவருடன் அப்பள்ளிக்கு வரும் மற்ற மாணவர்களும் காண நேர்ந்தால் உலக மாந்தர் அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய உண்மைகள் அன் நூலில் இருப்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து அன்புள்ளம் கொண்டவர்களாக மாறுவதற்கு நாம் முன்மாதிரியாக விளங்க முடியும்!

Wednesday, March 25, 2009

உலகமக்கள் மகிழ்ச்சியாகக் கூடிவாழ திருக்குறள் மட்டுமே உதவும்.

செயற்கு அறிய செய்வார் பெரியார் சிரியர்
செயற்கு உரிய செய்கலா தார் - ( திருக்குறள்:௨௬ )
இறைவனுடைய முதல்பண்பாகிய " அன்பு " அணுவிலும் இணைந்துள்ளதை , மனித அறிவு மட்டுமே உணர முடியும் ! இவ்வுண்மையை ௨000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளது ; இன்றுள்ள மணவை முஸ்தபா போன்ற அறிஞர்கள் ஆராய்ந்து வெளிக்கொணர்ந்துள்ளனர் . " ஃ " அக்கேனம் என்ற எழுத்தின் பொருளை உலக உயிர்களையெல்லாம் காப்பாற்றும் பொருளாக அடையாளம் கண்டுள்ளனர். அவர்களின் உயர்ந்த அறிவை இது காட்டுகிறது .

எல்லாச்சமயத்தினரையும் அன்பால் இணைக்கவே இறைவன் விரும்புகின்றார்

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை உலகில் உள்ள சமய அறிஞர்கள் எல்லோரும் புகழ்ந்து பாராட்டுகிறார்கள் . ஒவ்வொரு மனிதரிடமும் வேண்டுதல் வேண்டாமை இல்லாமல் இறைவன் மலர்மிசை ஏகியுள்ளார்.
ஆனால் , இந்த உண்மையை ஒரு ஆசிரியர் முறையாக விளக்கி தெளிவு படுத்தாதவரை மற்றவர்களுக்கு புரியவே புரியாது .
முதல் திருக்குறள் ; அதன் உவமை என திருவள்ளுவர் காட்டிஉள்ள இறைவனின் அன்பு எவ்வாறு உயிரிகளிடம் இணைந்துள்ளதை அறிந்துகொள்வது ?

Tuesday, March 24, 2009

Friday, March 20, 2009

அகர முதல

முதல் திருக்குறளை சரியாகப் புரிந்துகொள்ள "தமிழ் நெடுங் கணக்கை -அதில் "அகரம் "இடம் பெற்றுள்ள முதல் இடத்தையும் மாணவர்களிடம் காட்டுவதோடு மற்ற உயிர்மெய் எழுத்துகளிலும் அகரம் சேர்ந்துள்ளதை அவர்களுக்கு விளக்க ஆசியர்கள் அதிகமாக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் .

Thursday, March 19, 2009

"அகரம் " என்ற எழுத்து , எல்லா உயிர்மெய் எழுத்திலும் இறைந்து இருப்பதைப்போல இறைவன் உலகனைத்தும் உள்ள எல்லா உயிரிகளிலும் இறைந்து இருக்கின்றார். ஆகவே, என் உயிரிலும் இறைவன் இணைந்து இருக்கின்றார்" என நாம் முதல்குறளின் பொருளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் . இதன் பிறகுதான் முன்றாவது திருக்குறளை படித்து மேற்காணும் கருத்துகளோடு ஒப்பிட்டுப் பார்த்து முன்றாவது திருக்குறளின் பொருளை மிகமிகைச்சரியாக; அதாவது , நம் தாயின் கருவறைக்குள் நம் உயிர் இடம் பெறும்போதே இறைவனும் இணைந்து இடம்பெறுகிறார் ' என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . இதுதான் ஆசிரியர்களுக்கு உரிய அறிவு ! முதல் திருக்குறளின் பொருள் இரண்டாவது திருக்குறளைப் படித்தபின் மிண்டும் முதல் திருக்குறளை ஆய்வு செய்யவேண்டும் . ஆய்வு செய்தால் ஒவ்வொரு உயிரியிலும் இறைவனும் இணைந்திருக்கின்றார் என்ற உண்மை மாணவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் ; இப்போது இவுண்மை இவர்களுக்குத் தெரியாது .


இறைவன் தன் இதயத்தில் இருப்பதை மாணவர் மாணவிகள் உணர்ந்துகொண்டால் அந்த வினாடிமுதல் அவர்களுக்காகவே அம்மா அப்பாவைத் தந்ததுபோல அவர்களுக்காகவே ஆசிரியர்களைத் தந்தது போலவே ஆசிரியர்கள் அவர்களுக்குக் கற்பிக்க திருவள்ளுவரைக் கொண்டு



" ஃ " இறைவனை மானிடம் உணர்வதற்கே !

" ஃ " என்ற ஒரு அடையாளத்தை நம் முன்னோர்கள் ஆக்கியதற்கும் காரணம் உண்டு . "அ " அதாவது , அ "வுக்கு ஏனம்; "அக்கேனம் " என நம் முன்னோர்கள் குறிப்பிட்டார்கள் .
எழுத்துகள் , உயிர் -மெய் - உயிர்மெய் என நம் முன்னோர் வகுத்த முறையைக் கொண்டே நம் திருவள்ளுவர் இறைவனுக்கு உவமையாக , இறைவன் முதலாக ஒவ்வொரு உயிரியிலும் இருக்கும் அதேவேளையில் மூலமுதலாகவும் எழுத்துகளுக்கெல்லாம் முதலிலேயே இருக்கின்றார்; என மிகவும் தெளிவாக பொருள் விளங்க வைத்துள்ளார் . இந்த உண்மையை முதல் வகுப்பு மாணவர்கள் முதலாக அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் விளங்க வைத்தால் மாணவர்களின் உள்ளத்தில் அன்பு உணர்வை படிப்படியாக வளர்க்க முடியும் .

ஒவ்வொரு மாணவரும் தன்னை ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு தயார் செய்து கொள்ள உரிய கல்வி திருக்குறள் என்பதை தமிழாசிரியர்கள் உணர வேண்டும். அதிலும் முதல் திருக்குறளின் மூலம் எல்லாம்வல்ல இறைவன் மாணவர்களின் உள்ளத்திலேயே இருக்கின்றார் என்கின்ற உண்மையை தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்தும் முன் தாம் நன்றாகப் புரிந்துகொள்ள பலநாட்கள் ஆராய்ச்சி செய்யவேண்டும் .

முதல் திருக்குறளும் இரண்டாவது திருக்குறளும் மூன்றாவது திருக்குறளும் நான்காவது திருக்குறளும் எப்படி ஒரு அதிகாரத்தில் இடம்பெற காரணம் உள்ளதோ அதேபோல முதல் குறளுக்கும் இரண்டாம் குறளுக்கும் காரணம் உண்டு. முதல் திருக்குறளைக் கற்றதனால் ஆன பயன் என்ன புரிகிறதோ !

Wednesday, March 18, 2009

நம் இனம் இறைவனின் நற்பண்பை பெற :

மேலே குறிப்பிட்டுள்ள பதினோரு துறையினர்களும் இறைவனின் அன்பைப் பெற தங்கள் குடும்பத்தில் உள்ள தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு தமிழ் திருக்குறள் நூல் வாங்கி வழங்க பள்ளிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு திருக்குறள் நூல் இருப்பதை உலகோர் அறிய
இத்திட்டத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்ந்துள்ள பொது அமைப்புகள் எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு ௨௦௪௧ ( கி பி 2010) முதல் செயல்படுத்தி உலக நாடுகள் அனைத்திலும் புதிய வரலாறு படைக்க வேண்டும்.
மேற்காணும் திட்டத்தை செயல் படுத்திய அமைப்புகள் கிழ்காணும் முகவரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். நன்றி .

இறைவன் நம் இதயத்தில் எப்போதும் இருக்கின்றார்

நம்மை நல்வழியில் நடத்துவதற்காக இறைவன், நாம் நம் தாயின் கருவில் உதிக்கும் போதே = நாம் நம் தாயின் வயிற்றுள் ஏகும்போதே நம்முடன் இறைவனும் இணைந்து ஏகினார் ; என்று கொள்ள வேண்டும் .

"அடிகள் " என்றால் அது செய்யுளில் வருகின்ற அடிகளே என மாணவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும் ; 'மாணடி' என்றால் " அது இறைவனின் மாண்புகளை கொண்டது, ஞானிகள் எழுதியது " என பொருள் சொல்ல வேண்டும் . இது இன்று உள்ள ஆசிரியர்களின் அறிவு முதிர்ச்சியைக் காட்டும் .
எண்ணிறந்த குணங்களைக் கொண்ட இறைவன் நாம் நம் அன்னை வயிற்றில் உருவாகும்போதே நம்மிடம் வந்து சேர்ந்துவிட்டார் , இனி நம் பெற்றோரும் ஆசிரியர் பெருமக்களும் நம் நாட்டின் சட்ட முறைகளும் நம்மை வழிநடத்தும் தலைவர்களும் சட்டத்தை பாதுகாப்பவர்களும் திருவள்ளுவர் போன்ற ஞானிகளும் ஊழியம் செய்பவர் களும் விவசாயிகளும் ஈகையாளர்களும் இல்வாழ்க்கை வாழ்பவர்களும் நம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும் இறைவனுடைய ஒரு ஒழுக்க நூலை மாணவர் களுக்கு முறையாக கற்பிக்க முதல் வகுப்பு முதலே ஏற்பாடு செய்து உதவினால் மற்ற மற்ற பாடங்களோடு இறைவனின் திருவடிகளான திருக்குறளும் மாணவர்களை எவ்வுயிர்களின் மீதும் அன்புடையவர்களாகவும் நிறைந்த நற்பண்புகள் பெற்றவர்களாகவும் ஆக்கும் .

Tuesday, March 17, 2009

உவமை

ப்போது , அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களை முதலில் பார்ப்போம்.

"அக்கேனம்" என்ற ஆய்த ஏழுத்து இது . இதில் மூன்று புள்ளிகள் உள்ளன . மேலே உள்ள புள்ளியை இறைவனாகவும் இடப்பக்கம் உள்ளபுள்ளி உயிராகவும் வலப்பக்கம் உள்ளபுள்ளி உலகமாகவும் உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.

விளக்கம்

இப்பொழுது , உலகில் உள்ள அனைத்திலும் இறைவன் இறைந்து இருக்கின்றார் என்பதை நாம் அக்கேனம் வழி புரிந்துகொள்ளலாம் .

அக்கேனம் = " அ " வுக்கு ஏனம் என்பதை தமிழ் அகராதியில் படித்துத் தெரிந்து இருப்பீர்கள் .

" அ " என்ற எழுத்து, இறைவனுடைய தன்மைக்கு ஒரு உவமை . இறைவன் எங்கும்- எதிலும் இறைந்துள்ளார்; இறைவனைப்போல, " அ' என்ற எழுத்தும் மற்ற எல்லாஎழுத்திலும் இறைந்து உள்ளதை ; க்+ அ = க எ ன்று சொல்லப்படுவதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம் .

இதைப் போலவே , ஒவ் வொரு உயிரி யிலும் இறைவன் அன்பே உருவாகமாறி அனைத்து அணுக்களிலும் இறைந்து இருக்கின்றார் .

Monday, March 16, 2009

முதல்

அன்பு, ஆள்பவர், இல்வாழ்பவர் , ஈகையாளர் , உழவர், ஊழியர், எதி, ஏவலாளர், ஐயர், ஒறுப்பவர், ஓதுவிப்பவர், ஔதாரியர், ( இறைவன்- உயிர்- உலகம் )

இப்பனிரெண்டு சொற்களையும் , அடைப்புக் குறியுள் உள்ள மூன்று சொற்களையும் ஒருசிறந்த அகராதியைக்கொண்டு அதன் பொருளைப் புரிந்துகொள்ளுங்கள் .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு ( திருக்குறள் - 1 )

எல்லா எழுத்துகளையும் " அ " என்ற முதல் ஒலியை மூலமாக- முதலாகக் கொண்டுதான் ஒலிக்கின்றோம் . ஆகையால் எழுத்துகளுக்கெல்லாம் முதலாக அகரம் என்கின்ற " அ " இடம் பெற்றுள்ளது போல இறைவனும் உலகனைத்துக்கும் மூலமாக - முதலாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.