Thursday, April 9, 2009

இருபத்து ஆண்டுத் திட்டம் ஒன்றை தமிழர்கள் உலகமெங்கும் உருவாக்குவோம்!

உலகில் எங்கு நோக்கினும் மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை . இதற்கு என்ன காரணம் ? பணம் ! பணம்தான் இன்று எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு இருபது ஆண்டுகள் கண்டிப்பாக நம் பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டிய நூல் திருக்குறள் ஒன்றுதான்.

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு திருக்குறள் நூலை திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௧ ஜனவரில் வாங்கிக் கொடுத்து பள்ளிகளிலும் இல்லங்களிலும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அனைத்து நாடுகளிலும் உள்ள நம் சமுதாயத் தலைவர்கள் நம் சமுதாயத்தைச் சீர்திருத்த முன்வர வேண்டும்; பாதுகாக்க வேண்டும்.

இதற்கு,தமிழக அரசு தான் உலகத்தமிழர்களுக்கு முன்மாதிரியாக உலகத் தமிழர்களுக்கும் உணர்த்தும் வகையில் அதன் சட்ட நடவடிக்கைகளை முதலில் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் முறையாகப் பதிவு செய்யவேண்டும்.

திருவள்ளுவர் ஆண்டு ௨0௪௧ ஜனவரி முதல் சட்டமுறைப்படி தமிழரின் வாழ்வியல் நூல் திருக்குறள்தான் என்பதை உலகத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

No comments:

Post a Comment