Sunday, March 29, 2009
எய்தற்கு அரியது இயைந்தக்கால்..
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அறிய செயல் - திருக்குறள்- 489
திருக்குறளை மக்களின் இலக்கியமாக்குவோம்!
தமிழ் மாணவர்களுக்கு உலக அளவில் திருக்குறள் நூலில் தமிழ்ப் பாடம்!
ஒரு தமிழ்மாணவரின் கையில் உள்ள திருக்குறள் நூலை தமிழ் மாணவருடன் அப்பள்ளிக்கு வரும் மற்ற மாணவர்களும் காண நேர்ந்தால் உலக மாந்தர் அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய உண்மைகள் அன் நூலில் இருப்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து அன்புள்ளம் கொண்டவர்களாக மாறுவதற்கு நாம் முன்மாதிரியாக விளங்க முடியும்!
Wednesday, March 25, 2009
உலகமக்கள் மகிழ்ச்சியாகக் கூடிவாழ திருக்குறள் மட்டுமே உதவும்.
செயற்கு உரிய செய்கலா தார் - ( திருக்குறள்:௨௬ )
இறைவனுடைய முதல்பண்பாகிய " அன்பு " அணுவிலும் இணைந்துள்ளதை , மனித அறிவு மட்டுமே உணர முடியும் ! இவ்வுண்மையை ௨000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளது ; இன்றுள்ள மணவை முஸ்தபா போன்ற அறிஞர்கள் ஆராய்ந்து வெளிக்கொணர்ந்துள்ளனர் . " ஃ " அக்கேனம் என்ற எழுத்தின் பொருளை உலக உயிர்களையெல்லாம் காப்பாற்றும் பொருளாக அடையாளம் கண்டுள்ளனர். அவர்களின் உயர்ந்த அறிவை இது காட்டுகிறது .
எல்லாச்சமயத்தினரையும் அன்பால் இணைக்கவே இறைவன் விரும்புகின்றார்
ஆனால் , இந்த உண்மையை ஒரு ஆசிரியர் முறையாக விளக்கி தெளிவு படுத்தாதவரை மற்றவர்களுக்கு புரியவே புரியாது .
முதல் திருக்குறள் ; அதன் உவமை என திருவள்ளுவர் காட்டிஉள்ள இறைவனின் அன்பு எவ்வாறு உயிரிகளிடம் இணைந்துள்ளதை அறிந்துகொள்வது ?
Tuesday, March 24, 2009
Friday, March 20, 2009
அகர முதல
Thursday, March 19, 2009
"அகரம் " என்ற எழுத்து , எல்லா உயிர்மெய் எழுத்திலும் இறைந்து இருப்பதைப்போல இறைவன் உலகனைத்தும் உள்ள எல்லா உயிரிகளிலும் இறைந்து இருக்கின்றார். ஆகவே, என் உயிரிலும் இறைவன் இணைந்து இருக்கின்றார்" என நாம் முதல்குறளின் பொருளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் . இதன் பிறகுதான் முன்றாவது திருக்குறளை படித்து மேற்காணும் கருத்துகளோடு ஒப்பிட்டுப் பார்த்து முன்றாவது திருக்குறளின் பொருளை மிகமிகைச்சரியாக; அதாவது , நம் தாயின் கருவறைக்குள் நம் உயிர் இடம் பெறும்போதே இறைவனும் இணைந்து இடம்பெறுகிறார் ' என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் . இதுதான் ஆசிரியர்களுக்கு உரிய அறிவு ! முதல் திருக்குறளின் பொருள் இரண்டாவது திருக்குறளைப் படித்தபின் மிண்டும் முதல் திருக்குறளை ஆய்வு செய்யவேண்டும் . ஆய்வு செய்தால் ஒவ்வொரு உயிரியிலும் இறைவனும் இணைந்திருக்கின்றார் என்ற உண்மை மாணவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் ; இப்போது இவுண்மை இவர்களுக்குத் தெரியாது .
இறைவன் தன் இதயத்தில் இருப்பதை மாணவர் மாணவிகள் உணர்ந்துகொண்டால் அந்த வினாடிமுதல் அவர்களுக்காகவே அம்மா அப்பாவைத் தந்ததுபோல அவர்களுக்காகவே ஆசிரியர்களைத் தந்தது போலவே ஆசிரியர்கள் அவர்களுக்குக் கற்பிக்க திருவள்ளுவரைக் கொண்டு
" ஃ " இறைவனை மானிடம் உணர்வதற்கே !
எழுத்துகள் , உயிர் -மெய் - உயிர்மெய் என நம் முன்னோர் வகுத்த முறையைக் கொண்டே நம் திருவள்ளுவர் இறைவனுக்கு உவமையாக , இறைவன் முதலாக ஒவ்வொரு உயிரியிலும் இருக்கும் அதேவேளையில் மூலமுதலாகவும் எழுத்துகளுக்கெல்லாம் முதலிலேயே இருக்கின்றார்; என மிகவும் தெளிவாக பொருள் விளங்க வைத்துள்ளார் . இந்த உண்மையை முதல் வகுப்பு மாணவர்கள் முதலாக அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் விளங்க வைத்தால் மாணவர்களின் உள்ளத்தில் அன்பு உணர்வை படிப்படியாக வளர்க்க முடியும் .
ஒவ்வொரு மாணவரும் தன்னை ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு தயார் செய்து கொள்ள உரிய கல்வி திருக்குறள் என்பதை தமிழாசிரியர்கள் உணர வேண்டும். அதிலும் முதல் திருக்குறளின் மூலம் எல்லாம்வல்ல இறைவன் மாணவர்களின் உள்ளத்திலேயே இருக்கின்றார் என்கின்ற உண்மையை தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்தும் முன் தாம் நன்றாகப் புரிந்துகொள்ள பலநாட்கள் ஆராய்ச்சி செய்யவேண்டும் .
முதல் திருக்குறளும் இரண்டாவது திருக்குறளும் மூன்றாவது திருக்குறளும் நான்காவது திருக்குறளும் எப்படி ஒரு அதிகாரத்தில் இடம்பெற காரணம் உள்ளதோ அதேபோல முதல் குறளுக்கும் இரண்டாம் குறளுக்கும் காரணம் உண்டு. முதல் திருக்குறளைக் கற்றதனால் ஆன பயன் என்ன புரிகிறதோ !
Wednesday, March 18, 2009
நம் இனம் இறைவனின் நற்பண்பை பெற :
ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு திருக்குறள் நூல் இருப்பதை உலகோர் அறிய
இத்திட்டத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்ந்துள்ள பொது அமைப்புகள் எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு ௨௦௪௧ ( கி பி 2010) முதல் செயல்படுத்தி உலக நாடுகள் அனைத்திலும் புதிய வரலாறு படைக்க வேண்டும்.
மேற்காணும் திட்டத்தை செயல் படுத்திய அமைப்புகள் கிழ்காணும் முகவரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். நன்றி .
இறைவன் நம் இதயத்தில் எப்போதும் இருக்கின்றார்
"அடிகள் " என்றால் அது செய்யுளில் வருகின்ற அடிகளே என மாணவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டும் ; 'மாணடி' என்றால் " அது இறைவனின் மாண்புகளை கொண்டது, ஞானிகள் எழுதியது " என பொருள் சொல்ல வேண்டும் . இது இன்று உள்ள ஆசிரியர்களின் அறிவு முதிர்ச்சியைக் காட்டும் .
Tuesday, March 17, 2009
உவமை
இ ப்போது , அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களை முதலில் பார்ப்போம்.
"அக்கேனம்" என்ற ஆய்த ஏழுத்து இது . இதில் மூன்று புள்ளிகள் உள்ளன . மேலே உள்ள புள்ளியை இறைவனாகவும் இடப்பக்கம் உள்ளபுள்ளி உயிராகவும் வலப்பக்கம் உள்ளபுள்ளி உலகமாகவும் உருவகப்படுத்திக்கொள்ளுங்கள்.
விளக்கம்
இப்பொழுது , உலகில் உள்ள அனைத்திலும் இறைவன் இறைந்து இருக்கின்றார் என்பதை நாம் அக்கேனம் வழி புரிந்துகொள்ளலாம் .
அக்கேனம் = " அ " வுக்கு ஏனம் என்பதை தமிழ் அகராதியில் படித்துத் தெரிந்து இருப்பீர்கள் .
" அ " என்ற எழுத்து, இறைவனுடைய தன்மைக்கு ஒரு உவமை . இறைவன் எங்கும்- எதிலும் இறைந்துள்ளார்; இறைவனைப்போல, " அ' என்ற எழுத்தும் மற்ற எல்லாஎழுத்திலும் இறைந்து உள்ளதை ; க்+ அ = க எ ன்று சொல்லப்படுவதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம் .
இதைப் போலவே , ஒவ் வொரு உயிரி யிலும் இறைவன் அன்பே உருவாகமாறி அனைத்து அணுக்களிலும் இறைந்து இருக்கின்றார் .
Monday, March 16, 2009
முதல்
அன்பு, ஆள்பவர், இல்வாழ்பவர் , ஈகையாளர் , உழவர், ஊழியர், எதி, ஏவலாளர், ஐயர், ஒறுப்பவர், ஓதுவிப்பவர், ஔதாரியர், ( இறைவன்- உயிர்- உலகம் )
இப்பனிரெண்டு சொற்களையும் , அடைப்புக் குறியுள் உள்ள மூன்று சொற்களையும் ஒருசிறந்த அகராதியைக்கொண்டு அதன் பொருளைப் புரிந்துகொள்ளுங்கள் .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ( திருக்குறள் - 1 )
எல்லா எழுத்துகளையும் " அ " என்ற முதல் ஒலியை மூலமாக- முதலாகக் கொண்டுதான் ஒலிக்கின்றோம் . ஆகையால் எழுத்துகளுக்கெல்லாம் முதலாக அகரம் என்கின்ற " அ " இடம் பெற்றுள்ளது போல இறைவனும் உலகனைத்துக்கும் மூலமாக - முதலாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.